ஒரு வருடமாக பெண்ணுடன் குடும்பம் நடத்திய பெண்: ஆணாக நடித்தது அம்பலம்

Report Print Harishan in ஏனைய நாடுகள்
563Shares
563Shares
lankasrimarket.com

சீனாவில் பெண்ணை ஆண் என நம்பி திருமணம் செய்து கொண்ட பெண் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் பகுதியில் வசித்து வரும் 41 வயதான வாங் க்வி என்னும் பெண் விவாகரத்து பெற்று தனது ஒரு குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் அறிமுகமான க்யான் என்னும் நபருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

முதலில் காதலை தெரிவித்த க்யானை வயது குறைவானவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள தயங்கியுள்ளார் வாங், பின் க்யான் சமரசம் செய்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு தான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என உறுதியாக கூறிய க்யான், திருமணமாகிய 6 மாதத்திற்குள் 30 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.

அதன்பின் திடீரென க்யான் மாயமானதால் குழப்பமடைந்த வாங், தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து க்யானை தீவிரமாக தேடியுள்ளார்.

அப்போதுதான் க்யான் ஒரு ஆண் அல்ல, அவர் ஒரு பெண் என்பது வாங்-இற்கு தெரியவந்துள்ளது, இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான வாங், ஒரு பெண்ணாக இருந்தும் என்னை எவ்வளவு சாமர்த்தியமாக க்யான் ஏமாற்றியுள்ளது தாங்கிகொள்ளவே முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் தன்னைப் போல் வேறு யாரும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிகழ்வை வெளியுலகிற்கு பகிர்ந்து கொள்வதாக வாங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்