மகன் போட்டோவை பேஸ்புக்கில் பதிவிட்டால் தாய்க்கு 10,000 யூரோ அபராதம்: நீதிமன்றம் உத்தரவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
74Shares
74Shares
ibctamil.com

இத்தாலியில் மகனின் புகைப்படத்தை தாய் பேஸ்புக்கில் வெளியிட்டால் அவருக்கு 10000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் 16 வயதான மகனுடன் வசித்து வந்த நிலையில் மகனின் புகைப்படத்தை அடிக்கடி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

தன் புகைப்படத்தை தாய் அடிக்கடி பேஸ்புக்கில் பகிர்வதை மகன் விரும்பவில்லை, இந்நிலையில் கணவரை விவாகரத்து செய்ய மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அப்போது தனது அனுமதியில்லாமல் தனது புகைப்படங்களை தாய் பேஸ்புக்கில் வெளியிடுவதாக மகன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இத்தாலிய பதிப்புரிமை சட்டப்படி ஒருவரின் அனுமதியில்லாமல் அவர்களின் புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுவது தவறாகும்.

இதையடுத்து, இனி மகனின் புகைப்படத்தை தாய் பேஸ்புக்கில் பதிவிட்டால் அவர் 10000 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதோடு மகன் குறித்த பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்