ஏழு நாட்களில் காதல் திருமணம்: குத்தாட்டம் போட்ட ஜோடி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
128Shares
128Shares
lankasrimarket.com

நாள், நட்சத்திரம் பார்த்து திருமணம் நடைபெறும், கண்டவுடன் காதல், பார்த்து பழகிய காதலை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

இங்கு ஒரு தம்பதியினர், பேஸ்புக்கில் பழகி ஒருவார காலத்திலேயே திருமணம் செய்து கொண்டனர்.

நைஜீரியாவை சேர்ந்தவர் Chidimma Amedu, திருமண ஆசை வந்ததால் பெண் தேடுவதற்காக சுலபமான வழியை கையாண்டுள்ளார்.

பேஸ்புக்கில் தன்னுடைய பக்கத்தில், திருமணத்திற்கு பெண் தேவைப்படுவதாகவும், தகுதியான பெண் என்றால் ஜனவரி 6ம் திகதி திருமணம் செய்து கொள்ளலாம், உங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள், டிசம்பர் 31ம் திகதி 12 மணியுடனுடன் காலகெடு முடிவடைகிறது என பதிவிட்டார்.

மேலும் இதை விளையாட்டாக செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த Sophy Ijeoma என்ற பெண் பதில் அனுப்ப, இருவரும் Messenger-ல் உரையாடிய போது காதல் மலர துவங்கியது.

மேக் ஆர்டிஸ்டாக இருக்கும் Ijeoma கூறுகையில், Amedu செய்த முகநூல் பதிவை நான் விளையாட்டாக எடுத்து கொண்டேன்.

பின் அவரது அனைத்து பதிவுகளையும் ரசித்து விருப்பி பின்தொடர துவங்கினேன். அப்படி முதன் முதலாக நேரில் பார்த்து பழகிய போது Enugu எனும் southeastern Nigeria-வில் உள்ள ஓர் இடத்தில் எங்களது சந்திப்பு ஏற்பட்டது.

காதல் மலர்ந்த பிறகு சற்றும் தயங்காமல் இரண்டு நாட்களிலே Amedu வை மணமுடிக்க முடிவு செய்தேன் என்று கூறுகிறார்.

Amedu-வின் துணிச்சலான இந்த காதல் அறிவுறுத்தல் என்னை நேசிக்க செய்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இருவரும் சந்தோஷமாக மணக்கோலத்தில் குத்தாட்டம் போடும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்