ஓடுதளத்தில் இருந்து வெளியேறி பள்ளத்தில் சரிந்த விமானம்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
2200Shares
2200Shares
lankasrimarket.com

துருக்கி விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்து விலகி கட்டுப்பட்டை இழந்த விமானம் ஒன்று பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் Trabzon விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சி தரும் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

இதில் 162 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். விமானம் பள்ளத்தில் சரிந்ததில் 11 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். விபத்துக்குள்ளான Pegasus விமானமானது தலைநகர் அங்கராவில் இருந்து Trabzon சென்றதாக கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்கும் நேரம் மழை பெய்துகொண்டிருந்ததாகவும், இதனால் ஓடுதளத்தில் விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் விமானி தடுமாறியதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பள்ளத்தில் சரிந்துள்ளது. குறித்த ஓடுதளமானது கடற்கறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்