ரத்தக்கறை படிந்த எனது கைகளை அவன் அறிவான்: நெகிழ்ச்சி கதை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
162Shares
162Shares
lankasrimarket.com

வங்கதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது சகோதரனின் படிப்புக்காக கல் உடைக்கும் வேலை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த புகைப்படக்கலைஞர் Akin, இச்சிறுமியை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இச்சிறுமி தனது வாழ்க்கை குறித்து கூறியதாவது, எனது தாயும் தந்தையும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், அவர்களது குடும்பத்தில் இவர்கள் இருவரையும் சேர்த்துக்கொள்வதில்லை. எனது தந்தை ரிக்ஷா ஓட்டும் பணியை செய்து வந்தார். ஆனால், அவர் இறந்துவிட்டதால் எங்கள் குடும்பம் பெரும் கஷ்டத்தில் விழுந்தது.

இதனால் எனது தாய் கல் உடைக்கும் வேலைக்கு சென்றார். எனது தாயின் வருமானத்தில் நாங்கள் இருவரும் படித்தோம். ஆனால், அந்த வருமானம் எங்கள் குடும்பத்தை நடத்த போதவில்லை.

மேலும், நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு வந்து எனது தாய், இரவில் உடல் வலி தாங்கமுடியாமல், தூங்குவதற்கு சிரமப்படுவதை பார்த்து எனக்கு மிகுந்த வேதனையளிக்கும்.

இதனால், எனக்கு 6 வயது இருக்கையில் எனது தாயுடன் சேர்ந்து நானும் கல்லுடைக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

எனது தம்பி நன்றாக படிப்பான், இதனால் அவனை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி படிக்கவைப்பதில் நான், ஆர்வமாக இருந்தேன். எனது தம்பி படிக்க வேண்டும் என்பதற்காக , சற்று அதிக நேரம் வேலை செய்வேன்.

ஒரு செங்கற்களை உடைத்தால், 1 tatak கிடைக்கும். ஆரம்பத்தில் ஒரு கல் உடைக்க மிகவும் சிரமப்பட்டேன். தற்போது, ஒரு நாளைக்கு 125 செங்கற்களை உடைப்பேன். கடந்த மாதம் எனது தம்பிக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். அவள் தனது வகுப்பில் இரண்டாவது மாணவனாக வந்துள்ளேன்.

பள்ளி மற்றும் டியூசனுக்கு நடந்துசெல்வதால் அவனுக்கு கால் வலிக்கிறது. இதனால், சைக்கில் வாங்கி கொடுத்ததால், அதில் செல்கிறான், ரத்தக்கறை படிந்த எனது கைகளை அவன் நன்கு அறிவான்.

எனது தம்பி எப்போதும் என்னிடம் கூறுவது இதுதான், நான் படித்து முடித்து வேலைக்கு சென்றவுடன், நீ ஒரு போதும் வேலைக்கு செல்லக்கூடாது, நான் உன்னை பார்த்துக்கொள்வேன் என்பான். இந்த வார்த்தைகளே எனக்கு ஆறுதலாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்