12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை! உலகின் பிஸியான மருத்துவமனை இதுதான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டாக்டர் ஜோஸ் ஃபாபெல்லா நினைவு மருத்துவமனைதான் உலகில் அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனை என தெரியவந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள இந்த மருத்துவமனையில், சராசரியாக ஒரு நாளைக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றன. குறைந்தபட்சம் 60 குழந்தைகள் இங்கு பிறக்காத நாளே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த மருத்துவமனையில், 12 நிமிடங்களுக்கு ஒருமுறை பிரசவம் நிகழ்கிறது. ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக இந்த மருத்துவமனைக்கு தினமும் வருவதால், மகப்பேறு பிரிவு எப்போது நிரம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு படுக்கையை 5 பேர் பகிர்ந்து கொள்கின்றார்கள். எனவே, இங்கு எப்போது நெருக்கடி அதிகமாக உள்ளது. ஆனால், இங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் வயது, 13க்கும் குறைவு என்பது வருத்தமான விடயமாகும்.

இதற்கு காரணம் பிலிப்பைன்ஸ் ஒரு கிறித்துவ நாடு என்பதால், இங்கு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பதின் பருவ பெண்கள் அதிக அளவில் கர்ப்பமடையும் நாடுகளின் பட்டியலில், பிலிப்பைன்ஸ் நாடு ஆசியாவிலேயே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்