நோயாளி எவ்வளவு நாள் உயிர் வாழ்வார்? சரியாக கணிக்கலாம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நோயாளி எவ்வளவு நாள் உயிர் வாழ்வார்? எப்போது இறப்பார் என்று 90 சதவிகிதம் சரியாக கணிக்கும் Computer Program ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் நீண்ட காலம் தேவையற்று அட்மிட் செய்யப்படுவது தவிர்க்கப்பட இயலும்.

மருத்துவச் செலவுகள், மன உளைச்சல், எதிர்பாராத நேரத்தில் பிரியமானவர்களை இழந்துவிடுவோமோ என்கிற அச்சம் போன்றவை இதனால் தவிர்க்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவிலுள்ள Stanford Universityயில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்த Computer Programஐ உருவாக்கியுள்ளது.

Stanford மருத்துவமனை மற்றும் Lucile Packard குழந்தைகள் நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 1,60,000 பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் patient fileகளை ஆய்வு செய்து artificial intelligenceஐப் பயன்படுத்தி இந்த Computer Program உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Computer Programஐப் பயன்படுத்தி, மருத்துவமனையில் உள்ள 40,000 நோயாளிகளில் யார் மூன்று மாதத்திலிருந்து 12 மாதங்களுக்குள் இறந்துபோவார்கள் என்று ஆய்வு மேற்கொண்டபோது, 90 சதவிகித முடிவுகள் சரியாக இருந்தன.

இந்த Program, குறிப்பிட்ட நோயின் அடிப்படையிலோ அல்லது இடத்தின் அடிப்படையிலோ உருவாக்கப்படாமல், எல்லா நோய்களாலும் ஏற்படும் இறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் செயல்படுத்துவதற்கு முன் இந்த Programஐ இன்னும் மேம்படுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்