உலகநாடுகளின் எதிர்பார்ப்பு இப்படியாகிவிட்டதே? வடகொரியா ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடகொரியா தென் கொரியாவுடனான பேச்சு வார்த்தையை திடீரென்று ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியா, உலகநாடுகளின் பேச்சை கேட்காமல் தன்னுடைய சோதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றம் குறைய வேண்டும் என்றால் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை ஒன்று தான் சரியான தீர்வு என்று கூறப்பட்டது.

ஆனால் வடகொரியாவோ பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இந்நிலையில் தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள வடகொரியா விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்த அந்த நாட்டுக்கு தென்கொரியா அழைப்பு விடுத்தது.

அதன் பேரில் கடந்த 9-ஆம் திகதி இரு நாட்டு எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடந்தது.

இந்த பேச்சு வார்த்தையின்போது, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தனது குழுவை அனுப்பி வைக்க வடகொரியா ஒப்புக்கொண்டது.

இதையடுத்து இரு நாடுகளும் அந்த போட்டியின்போது ஒரே கொடியின் கீழ் அணிவகுக்கவும், ஐஸ் ஹாக்கி போட்டியில் இரு நாடுகளின் ஒன்றிணைந்த அணியை அமைத்து போட்டியில் பங்கேற்கச்செய்வது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதைக் கண்ட உலகநாடுகள், இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தும், ஒரு இணக்கமான சூழல் உருவாகும், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணியும் என்று எதிர்பார்த்தன.

ஆனால் இந்த வார இறுதியில் நடக்கவிருந்த பேச்சு வார்த்தையை சற்றும் எதிர்பாராத வகையில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் ரத்து செய்து விட்டதாகவும், இதற்கான காரணம் சரிவர தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers