கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் பற்றி தெரியுமா

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
261Shares

தொழில்துறையில் சிறந்து விளங்கும் துபாயில் பிச்சை எடுப்பவர்கள் கூட ஒரு மாதத்திற்கு சுமார் 48 லட்சம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்கள், கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அந்நாட்டில், பிச்சைஎடுப்பது சட்டப்படி குற்றம் ஆகும்.

இருப்பினும், இவர்கள் அதனை ஒருதொழிலாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். அதாவது, வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு வருபவர்கள்3 மாத விசாவோடு வருகிறார்கள்.

மிகவும் நாகரீகமாக உடை அணிந்துகொள்ளும்இவர்கள், பார்ப்பதற்கு பணக்காரர்கள் போன்று இருப்பார்கள். இவர்கள், தங்களது பாஸ்போர்ட்தொலைந்துவிட்டது என்றும் இதனால் எங்களால் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியவில்லை, சாப்பிடவும்வழியில்லை என்று உருக்கமான கதைகளை சொல்லி, பணக்காரர்களிடம் பிச்சை எடுப்பார்கள்.

குறிப்பாக, தங்களுக்கு எந்த அளவு தொகை வேண்டுமோ, அதனை கேட்பார்கள், துபாய் ஷேக்குகளுக்குஇவர்கள் கேட்கும் தொகை சாதாரணம் என்பதால், அவர்களும் இந்த தொகையை கொடுத்துவிடுகிறார்கள்.

மசூதி வாசலில் பிச்சை கேட்டால், கேள்வி கேட்காமல் கேட்ட தொகை கிடைத்துவிடுகிறது. அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாயைச் சம்பாதித்துவிடுகிறார்கள்.

இப்படி ஒரு மாதத்தில் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மூன்று மாதங்களில் பணம் சேர்ந்தவுடன் துபாயிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.

பணம் செலவான பிறகு, மீண்டும் துபாய் நோக்கி வருகிறார்கள். இதனால்,இப்படிப்பட்ட பிச்சைகாரர்களை கண்டிப்பது பொலிசாருக்கு கடினமாக உள்ளது.

இதுவரை, 65 பிச்சைகாரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்