பாகிஸ்தானில் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்ட திருடன்களை பெண் ஒருவர் அடித்து உதைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் ராவல் பிண்டி பகுதியில் இரண்டு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அதில் ஒரு பெண்ணின் பையை திருடி செல்ல முற்பட்டனர்.
அப்போது அவர்களின் இரு சக்கர வாகனம் அந்த இடத்திலே விழுந்ததால், உடனடியாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி, குறித்த அவர்கள் இருவரையும் தாக்கினார்.
அதில் ஒருவன் ஓடிவிட, கையில் சிக்கிய மற்றொருவனை எட்டி, உதைத்தும் கன்னத்தில் அடித்தும் உள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருவதால், இதைக் கண்ட இணையவாசிகள் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.