சிறுவனின் இதயத்தை துளைத்து நின்ற கம்பி: உயிர் பிழைத்த அதிசயம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கம்பி ஒன்று அவனின் மார்பை துளைத்தது.

பிரேசிலில், Marivaldo Jose da Silva எனும் 11 வயது சிறுவன், வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியின் மீதேறி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பீப்பாய் ஒன்றினுள் அவன் தவறி விழுந்துள்ளான்.

பீப்பாயில் இருந்த இரும்பு கம்பி ஒன்று அவனின் இதயத்தை ஊடுருவி மார்பை துளைத்து நின்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் Silva அனுமதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் சோதித்தபோது, சிறுவனின் இதயத் துடிப்பால் மார்பில் துளைத்திருந்த கம்பி அதிர்ந்துள்ளது தெரிந்தது.

அந்த கம்பி சிறுவனின் உடலில் இருப்பதால் அவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் முதலில் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், மிகவும் சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், சிறுவனின் உடலில் இருந்து அந்த கம்பியை வெளியேற்றினர்.

தற்போது சிறுவன் நல்ல உடல் நலத்துடன் உள்ளான். மேலும், அவனுக்கு மூச்சு விடுவதிலும் பிரச்சனைகள் இல்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்