பட்டப்பகலில் மகன் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை: கண்ணீருடன் போராடிய மனைவி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரேசிலில் மனைவி கண்முன்னே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பிரேசிலின் São Paulo பகுதியில் உள்ள São José do Rio Preto என்ற இடத்தில் Eder Bruno de Melo Alves(33) என்பவர் தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று இருசக்கர் வாகனத்தில் வந்த இருவரில் ஒருவன், Bruno de Melo Alves-விடம் பேச்சு கொடுத்த நிலையில், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அழுது கொண்ட அவருக்கு ஒரு கவசம் போன்று இருந்து கொண்டு மீண்டும் சுட்டுவிடாதே என்றபடி கணவனை அழைத்து சென்றார்.

ஆனால் எதிர்பாரதவிதமாக அவர் அந்த இடத்திலே பரிதாபமாக இருந்தார். இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

சம்பவத்தை அறிந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் அவரின் உறவினர் தான் எனவும், அவரின் பெயர் Flavio Gomes de Souza எனவும் பொலிசா தெரிவித்துள்ளனர்.

அவரை கைது செய்துவிட்டதாகவு, இது எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers