71 பேரை காவு வாங்கிய விமான விபத்து: விபரங்கள் வெளியானது- அதிர்ச்சியூட்டும் வீடியோ

Report Print Athavan in ஏனைய நாடுகள்
1786Shares
1786Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இறந்த 71 பேரில் குறைந்த வயதுடைய நபராக 5 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார், இவர் தனது 32 வயது அம்மாவுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

ரஷ்யாவில் 71 பயணிகளுடன் புறப்பட்ட அண்டோனோவ் அன்-148 என்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரின் தகவல் தொடர்பில் இருந்து மறைந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர்.

மிக இளவயதுடைய ஐந்து வயது சிறுமியும் ஒருவர், அவரது பெயர் Nadezhda என்றும் அவர் Orenburg மாகாணத்தில் உள்ள ஆர்ஸ்க் நகரை சேர்ந்தவர் என்றும் ரஷ்ய உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் Livanov(12), Poletayev(17) எனும் சிறுவர்களும் இறந்தவர்களின் பட்டியலில் அடக்கம்.

Anastasia Slavinskaya(29) என்ற விமான பணிப்பெண்ணும், துணை விமானி Sergey Gambaryan(34) மற்றும் Lyudmila Kovchuga(53) என்ற மருத்துவர் ஆகியோர் பற்றிய தகவல்களுடன் சுவிட்சர்லாந்து, அசர்பைஜான் மற்றும் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த சிலரும் விமானத்தில் விபத்தில் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த எவரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை என ரஷ்யாவில் உள்ள அதன் தூதரகம் உறுதிசெய்துள்ளது.

விமான போக்குவரத்து ரேடாரில் கடைசியாக பதிவாகியுள்ள தகவலின் படி விபத்து ஏற்பட்ட பின் விமானம் நிமிடத்திற்கு 22,000 அடி விகிதத்தில் தரையை நோக்கி சென்று விழுந்துள்ளது.

ரஷ்ய போக்குவரத்து துறை அமைச்சர் Maxim Sokolov கூறுகையில், “விமானத்தில் பயணம் செய்த யாரும் பிழைக்கவில்லை, விபத்துக்கு முன்னதாக தொழில்நுட்ப பிழை குறித்து எந்த தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை எனவே விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது” என்றார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்