65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு திண்றுவிட்டது: விசாரணையில் இளம்பெண் சொன்ன காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நைஜீரியாவைச் சேர்ந்த பெண் 65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு தின்றுவிட்டதாக கூறியதால், அந்நாட்டு மக்கள் அதுகுறித்து கேலி செய்து வருகின்றனர்.

நைஜீரியாவைச் சேர்ந்தவர் பிலோமினா ச்சிசே, அந்நாட்டு தேர்வு வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் இவர் தேர்வுக்கான கட்டணங்களை வசூலித்துள்ளார்.

இந்நிலையில் அவரிடம் தேர்வுக்கான கட்டணங்கள் குறித்து தேர்வு குழு கேட்டுள்ளது. அப்போது கணக்கில் வராத சுமார் 65 லட்சம் ரூபாய் பணத்தை பற்றி கேட்ட போது, அது தொலைந்து போய்விட்டதாகவும், பாம்பு திண்றுவிட்டதாகவும் காரணம் கூறியுள்ளார்.

இதை ஏற்றுக் கொள்ளாத தேர்வு குழு அதிகாரிகள் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தகவல் நைஜீரியா மக்களுக்கு தெரியவந்ததையடுத்து சமூகவலைத்தலங்களில் டிராண்டாக்கி வருகின்றனர்.

அதில், ஒரு பாம்பால் இந்த அளவுக்கு பணத்தை கையாள முடியாது என்றும் பணம் விழுங்கும் பாம்பின் மீது எந்தக் கருணையும் காட்டப்படகூடாது எனவும் கேலி செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்