வாகனத்தில் அடிபட்டு இறந்தது தெரியாமல் நண்பனை எழுப்பும் நாய்: உருக வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
467Shares
467Shares
lankasrimarket.com

சீனாவின் ஹூபே மாகாணத்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்தது தெரியாமல் தனது நண்பனை நாய் ஒன்று எழுப்பும் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஹூபே மாகாணத்தின் சாலை ஒன்றில் வாகனத்தில் அடிப்பட்டு நாய் ஒன்று இறந்துள்ளது.

சாலையில் கிடந்த நாயை அதன் நண்பன் நாய் ஒன்று பார்த்துள்ளது. உடனடியாக அதனை எழுப்பும் முயற்சியில் அந்த கறுப்பு நிற நாய் இறங்கியுள்ளது.

இதனிடையே சாலையில் இறந்து கிடந்த நாயை அப்பகுதி பொலிசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் நாய் இறந்து கிடந்த பகுதியில் இருந்து அந்த கறுப்பு நாய் விலகவே இல்லை என கூறப்படுகிறது.

குறித்த காட்சிகள் கடந்த 12 திகதி அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

பரபரப்பான சாலையை கடக்க முயன்ற நிலையில் குறித்த நாய் வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இறந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னரும் பல மணி நேரம் அந்த கறுப்பு நாய் அதே இடத்தில் மிகவும் சோகமாக படுத்திருந்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்