தன் இறப்பை முன்கூட்டியே கணித்த இளைஞர்: ரஷ்ய விமான விபத்தில் நடந்த சோகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்ய விமான விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் தமது இறப்பை முன்கூட்டியே கணித்துள்ளது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய இளைஞர் தமது இறப்பை முன்கூட்டியே கணித்திருந்தும் அதை தவறாக புரிந்து கொண்டதால், விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் Ilya Stavsky என்ற 33 வயது இளைஞர் தமது எதிர்காலம் கூறித்து crystal ball மூலம் தெரிந்து கொண்டுள்ளார்.

அதில், பனிமூடிய பிரதேசம் எங்கும் பொலிசார் குவிந்திருப்பதாகவும், ஏதோ மர்ம பொருட்களை அவர்கள் தேடுவதாகவும் அதில் அவருக்கு தெரிந்துள்ளது.

இதனால் சுதாரித்துக் கொண்ட அவர், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கும் தமது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏதேனும் பிரச்னை எழ வாய்ப்பு உள்ளது என நம்பியுள்ளார்.

இதனால் crystal ball அளித்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு உடனடியாக தமது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த தகவலை தமது காதலியிடமும் அவர் பகிர்ந்துள்ளார். மாஸ்கோவில் உள்ள அவரது காதலியை சந்தித்து விட்டு விபத்துக்குள்ளான விமானத்தில் அவர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Ilya கணித்த அதே பகுதியில் தற்போது விமானம் விபத்துக்குள்ளானதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அன்றைய நாள் பயணத்தை Ilya ரத்து செய்வதாக இருந்தது எனவும், ஆனால் பணியில் உடனடியாக சேர வேண்டும் என நிர்பந்தம் இருந்ததால் குறித்த விமானத்தில் அவர் பயணம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்