13 ஆண்டுகால காதலியை மணந்த 59 வயது காதலன்: காதலர் தினத்தில் சுவாரஸ்யம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
328Shares
328Shares
lankasrimarket.com

காதலர் தினத்தை முன்னிட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் 160 காதல் ஜோடிகள் மணவாழ்க்கைக்கு மாறினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுபிக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 35-ஆண்டுகளாக இணைந்து வாழும் காதல் ஜோடிகள், 59 வயதான காதல் ஜோடிகள் என பலரும் புதுமணத் தம்பதிகள் ஆகினர்.

இதே போல் பழங்குடியின வழக்கப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதிகளும், புதிதாக சட்டரீதியான திருமணத்தின் பயன்களைப் பெற மீண்டும் இவ்விழாவில் கலந்து கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் 59 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய 13-ஆண்டுகால காதலியை கரம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்