காதல் திருமணம் செய்த மகள் இறந்துவிட்டதாக செய்தி: பதறி துடிக்கும் பெற்றோர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1057Shares
1057Shares
lankasrimarket.com

உங்கள் பெண் இறந்துவிட்டாள் என்று பெற்றோருக்கு தகவல் வந்ததால், அவர்கள் மகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து ஒன்றும் தெரியாமல் பதறி போய் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகானந்தம்-செல்வகோமதி. இவர்களுக்கு பூரணாதேவி என்ற மகள் உள்ளார்.

பூரணா தனக்கு 19 வயது இருக்கும் போது தன்னுடைன் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்த ரிமுஷேக் என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டார்.

இதை அறியாத அவரது பெற்றோர் முதலில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதை அறிந்த அவர்கள் புகாரை திரும்பப் பெற்றுள்ளனர்.

திருமணமான இருவரும் கொல்கத்தாவில் தங்கியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பூரணாவில் திருப்பூரில் உள்ள பெற்றோருடன் தினந்தோறும் செல்போனில் பேசி வந்துள்ளார்.

அதன் பின் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது வங்கதேசத்தில் வசிப்பதாக தன் பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் திகதி பூரணாவின் பெற்றோருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது, அதில் உங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் செய்வது தெரியாமல், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்துள்ளனர்.

அப்போது அவரிடம், தங்களின் மகள் பூரணாதேவி மரணமடைந்து விட்டதாக வந்த தகவலைப் பற்றியும், ரிமுஷேக் என் மகளை தவறான நோக்கத்துக்காக அவர் கடத்தி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதால், பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து என் மகளை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்