விமானத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட மாதவிடாய் வலி: கண்ணீர் விட்டு அழுததாக கணவர் வேதனை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

விமானத்தில் பெண் ஒருவருக்கு மாதவிடாய் வலி ஏற்பட்டதால் விமானத்தை விட்டு கீழே இறங்கும் படி விமான பணியாளர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் Birmingham விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு Emirates நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது.

அந்த விமானத்தில் Beth Evans(24)- Joshua Moran(26) என்ற தம்பதியும் இருந்துள்ளனர். Beth Evans-க்கு திடீரென்று மாதவிடாய் வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் Beth Evan உதவி கேட்டுள்ளார், அவர்கள் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்றுவரும்படி கூறியுள்ளனர்.

தொடர்ந்து அதைப் பற்றியே கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால் வலியால் துடித்த Beth Evanனால் பதில் கூறமுடியவில்லை.

இதற்கிடையே மருத்துவர்களும் இல்லாத காரணத்தினால், இறுதியில் அவர்களை நிறுவனம் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து Joshua Moran கூறுகையில், இது என்ன மிகப்பெரிய மடத்தனமாக இருக்கிறது, வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள், அப்போது அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை மேலும் சிரமத்திற்குள்ளாக்கிவிட்டனர்.

பயணிகள் விடயத்தில் நாங்கள் எந்த வித ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, மருத்துவரின் ஆலோசனை முக்கியம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...