தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதியின் சிசிடிவி காட்சி: உயிருக்கு பயந்து ஓடும் பெண்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் ஐஎஸ் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசுக்கு உட்பட்ட வடக்கு காக்கேசியா பகுதியில் உள்ள கிஸ்லியார் நகரில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது.

இங்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென்று அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர், இரண்டு பேர் காயங்களுட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், வரும் மார்ச் மாதம் 18-ஆம் திகதி ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்திய நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் வரும் நபரின் பெயர் Khalil Khalilov(22) என தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில், இவர் தேவாலயத்தின் அருகே இருக்கும் சுவரில் துப்பாக்கி பிடித்த நிலையில் வருகிறார், அதன் பின் அல்லாஹ் அக்பர், கடவுளே சிறந்தவர் என்று கத்திக் கொண்டு அங்கிருக்கும் மக்களை நோக்கி சுடுகிறார். இதில் ஒரு பெண் உயிருக்கு பயந்து ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்