பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஊர்சுற்றிய வடகொரிய தலைவர்கள்: தகவல்கள் அம்பலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
110Shares
110Shares
ibctamil.com

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி கள்ளத்தனமாக வெளிநாடு சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

வடகொரிய தலைவர்கள் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

1990ஆம் ஆண்டுகளில் வடகொரிய தலைவர்கள் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இவ்வாறு கள்ளத்தனமாக விசா பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளதை பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தில் கல்வி பயின்ற காலகட்டத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது சிறுவன் கிம் ஜாங் உன் மீது ஊடக வெளிச்சம் விழாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு அதனால் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது பல ஐரோப்பிய நாடுகளில் கள்ளத்தனமாக வடகொரிய தலைவர் சென்று வந்துள்ளதை அதிகாரிகள் வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.

இது, வடகொரிய தலைவர்கள் உலக நாடுகளின் நெருக்கடியை எதிர் கொண்டால் தப்பிக்க ஒரு வாய்ப்பாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆனால் பிரேசிலில் அமைந்துள்ள வடகொரிய தூதரகமானது இந்த விவகாரத்தில் கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், Josef Pwag என்ற பெயரில் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளார்.

கிம் ஜாங் உன் தந்தை Ijong Tchoi என்ற பெயரிலும் கடவுச்சீட்டு பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமின்றி இருவரும் பிரேசில் குடிமக்கள் என்ற முகவரியில் இந்த கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்