ரசாயன ஆயுதங்கள் தயாரிக்க சிரியாவுக்கு உதவிய வடகொரியா

Report Print Santhan in ஏனைய நாடுகள்
144Shares
144Shares
lankasrimarket.com

சிரியாவிற்கு ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை வடகொரியா கொடுத்து உதவியதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதாவது சிரியா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தான் இந்த போர் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கிளர்ச்சியாளர்களை நோக்கி அரசு படை வான் வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதில் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பதால் அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவியது.

இதையடுத்து சிரியாவில் செயல்படும் ரசாயன ஆயுத ஆலைகளுக்கு வடகொரியா கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சீனா வழியாக ஏராளமான மூலப்பொருட்களை அனுப்பி வைத்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், Wall Street ஆகிய பத்திரிகைகள் குற்றம்சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்