சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நீடிப்பதற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தான் காரணம் என்பது அனைத்து தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
இவ்விரு வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் நடைபெறும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இப்படி குண்டு மழை பொழிவது சிரியாவில் இன்று நேற்று அல்ல 7 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.
ஆசாத்துக்கு ஷியா பிரிவினர் அதிகம் உள்ள நாடுகளான ஈரான், ஈராக் மற்றும் இஸ்புல்லா இயக்கத்தினர் ஆதரவாக இருக்கின்றனர்.
மேலும் அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் களம் இறங்கியது. மறுபுறம் கிளர்ச்சியாளர்களுக்கு சன்னி பிரிவு மக்கள் அதிகம் உள்ள துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆதரவு தருகிறது.
எப்போதும் வளைகுடா நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் அமெரிக்காவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக பேர்களத்தில் குதித்தது.
இவர்கள் அனைவரையும் ஓழித்துக்கட்டி இஸ்லாமிய அரசை நிறுவும் முயற்சியில் ஐ.எஸ் போர்க்கொடி தூக்க சிரியா உள்நாட்டு போர் கிட்டத்தட்ட உலக நாடுகளின் சண்டையாகிவிட்டது.
சிரியாவின் எண்ணெய் வளத்தைக் கைவசம் வைத்துக்கொள்ள வல்லரசு நாடுகளான ரஷ்யாவும், அதற்கு போட்டியாக அமெரிக்காவும் போரில் தலையிட்டதே சிரியாவில் ஓயாமல் சண்டை நடைபெற முக்கிய காரணமாகும்.
இதனால் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் மடிந்துள்ளனர். உடைமகைளை இழந்து உயிரைக் காப்பாற்ற எண்ணி சுமார் 1 கோடி பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.
அப்படிச் சென்றபோது 2015ஆம் ஆண்டு துருக்கி கடற்கரையில் சிறுவன் ஹைரான் இறந்து கிடந்த காட்சி தான் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது.