பொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தை: இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
398Shares

பொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தை குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த பெண்ணிற்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மெக்சிகோவில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பை ஒன்று தானாக அசைவது போன்று இருந்துள்ளது.

அதன் பின் கிட்டே சென்று பார்த்த போது பிறந்து சிறிது நேரம் கூட ஆகாத குழந்தை அந்த பொலிதின் பையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

உடனடியாக இதைக் கண்ட அந்த பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவ உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதைத் தொடர்ந்து பொலிசாருடன் வந்த மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர்.

அப்போது தகவல் கொடுத்த அந்த பெண், அக்குழந்தையை பார்த்து சற்று உணர்ச்சிவசப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தி வைரலாகியதால், வீடியோவைக் கண்ட சிலர் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை உயிர் பிழைப்பதற்கு உதவிய கருணை உள்ளமே என்றும் ஒரு சிலர் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களைப் பார்த்து அந்த குழந்தையின் தாயை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்