வட கொரிய தலைவர்கள் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியது ஏன்? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய தலைவர்கள் போலி கடவுச்சீச்ட்டு பயன்படுத்தியதாக தகவல் வெளியான நிலையில் அதன் காரணம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வடகொரியாவில் 1990 காலகட்டத்தில் பனிப்போர் நடைபெற்று கொண்டிருந்தது. சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான டொலர்கள் வெளிநாட்டுக் கடனுடன், வட கொரியா பெரிதாக கண்டுகொள்ளப்படாத ஒரு நாடாக இருந்த நிலையில், உள்நாட்டில் பற்றாகுறையும், பஞ்சமும் நிலவியது.

பனிப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில், வட கொரியிவின் நட்புறவு நாடுகள் மிகவும் குறைந்து, அதனுடைய கடவுச்சீட்டு மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தப்படும் நிலை உருவானது.

அப்போது வட கொரியாவின் தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகளே ஆகியிருந்த கிம் ஜாங்-இல், போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வதை கருத்தில் கொண்டிருந்தார்.

மட்டுமின்றி, மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கில் பல முறை அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணங்களுக்கு எல்லாம் கடவுச்சீட்டு தேவைப்படாமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தை ஆய்வாளர்கள் முவைத்துள்ளனர்.

பிரேசிலின் கடவுச்சீட்டு மிகவும் விலையுயர்ந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்று 2015ஆம் ஆண்டு அமெரிக்க ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது.

கிம் குடும்பத்தாரும் கிழக்காசிய தோற்றமுடைய பிரேசிலின் அதிக அளவிலான மக்கள்தொகையின் ஒரு பகுதியாக குறித்த போலி கடவுச்சீட்டை வைத்து எளிதாக கடந்து சென்றிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்