சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் எது தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை பட்டியலில் இந்தியாவின் டெல்லி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச விமான நிலைய கவுன்சில், சர்வதேச அளவில் பரப்பளவு மற்றும் பயணிகள் வந்து செல்லும் விகிதத்தின் அடிப்படையில், விமான நிலையங்களின் சேவைத் தரத்தினை ஆண்டுதோறும் ஆராய்ந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலை அந்த கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும், கடந்த ஆண்டு மட்டும் இங்கு 60 மில்லியன் பயணிகள் வந்து சென்றதின் அடிப்படையில், இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனாவின் பெய்ஜிங் விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் தைவானின் தைபேய் நகர விமான நிலையமும் உள்ளன.

கடந்த ஆண்டு, தென்கொரியாவின் இன்சியான் விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers