இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த அழகியை பற்றி தெரியுமா? காரணம் என்ன?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
339Shares
339Shares
lankasrimarket.com

இணையத்தில் வைரலாக வலம் வரும் Yang Dan (44) என்னும் இந்தப் பெண் சீன அரசுத் தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக இருக்கிறார்.

இந்த படங்கள் சுமார் 20 ஆண்டுகள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்டவை என்றால் நம்பமுடிகிறதா? நம்புங்கள்.

1996ஆம் ஆண்டு தனது முதல் வானிலை அறிக்கையை வாசிக்கும்போது எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இருக்கிறார்.

ட்விட்டருக்கு இணையாக சீனாவில் பிரபலமான சமூக ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட இவரைக் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் 1996 ஆம் ஆண்டு அவர் வாசித்த வானிலை அறிக்கை முதல் 2015இல் அவர் வாசித்த வானிலை அறிக்கைகள் வரை தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன.

சுமார் 20 வருடங்கள் கடந்தும் அவர் தோற்றத்தில் மாற்றம் எதுவுமில்லை.

அன்று எவ்வளவு இளமையாக இருந்தாரோ இன்றும் அதே இளமையுடன் அவர் இருப்பதைக் கண்டு மக்கள் வியப்படைகிறார்கள்.

சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில் அந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இதுவரை 20,600 பேர் அந்த வீடியோவைப் பார்த்து ஆச்சரியமடைந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டிருக்கிறார்கள்.

எங்கள் இள வயதிலிருந்து இந்தப்பெண்ணைப் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கு வயதாகி விட்டது. இவர் இன்னும் அப்படியே இருக்கிறாரே என்று பலர் வியந்துள்ளனர்.

ஒருவர் ”எல்லா வானிலை அறிக்கைகளையும் ஒரே நாளில் ரெக்கார்ட் பண்ணினார்களோ?” என்று வேடிக்கையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்