ஈரானில் விபத்துக்குள்ளான தனியார் விமானம்: அனைவரும் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
378Shares
378Shares
lankasrimarket.com

துருக்கி நாட்டைச் சேர்ந்த தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து ஈரான் நோக்கி பயணமான துருக்கி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் மேற்கொண்டிருந்த 11 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானமானது டெஹ்ரானில் இருந்து சுமார் 400 கி,மீ தொலைவில் Shahr-e Kord என்ற நகரத்தின் அருகாமையில் விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்து குறித்து தகவல் வெளியானதும் ஈரானின் அவசர கால மீட்பு குழுவினரும், மருத்துவ குழுவினரும் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த விமானமானது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து Shahr-e Kord பகுதியில் அமைந்துள்ள மலை ஒன்றில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், விமானத்தில் இயந்திரத்தில் நெருப்பு பற்றிக் கொண்டதை அடுத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் தெற்கு ஈரானில் 65 பேர் கொல்லப்பட காரணமான விமான விபத்துக்கு பின்னர் இந்த விபத்து நடந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்