தேவாலயத்தின் மீது மின்னல் தாக்கி விபத்து: 16 பேர் உடல் கருகி பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
379Shares
379Shares
lankasrimarket.com

ருவாண்டா நாட்டில் தேவாலயம் ஒன்றில் மின்னல் தாக்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருவாண்டாவின் தென் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஒன்றில் இயங்கி வரும் ஏழாவது நாள் அட்வெண்டிஸ்ட் தேவாலயத்திலே மின்னல் தாக்கியுள்ளது.

ஞாயிறு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 14 பேர் சம்பவயிடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளனர். 140 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 16 என உயர்ந்துள்ளது.

காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் முதலுதவிக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்