பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தச் சொன்ன புடின்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1224Shares
1224Shares
lankasrimarket.com

110 பயணிகளுடன் ரஷ்யா நோக்கி வரும் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

இது நடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் திகதி.

அன்றைய தினம் ரஷ்யாவின் Sochi நகரில், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கும் மைதானத்தை நோக்கி 110 பயணிகளைக் கொண்ட Turkish Pegasus Airlines விமான நிறுவனத்தைச் சேர்ந்த Boeing 737-800 விமானம் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அதிலுள்ள பயணிகளில் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

மைதானத்திலோ 40,000 பேர் அமர்ந்திருக்கிறார்கள், இத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகளைக் கேட்டுள்ளார் புடின், விமானத்தை சுட்டு வீழ்த்தி விடுவோம் என்றிருக்கிறார்கள் அதிகாரிகள்.

விமானத்திலுள்ள 110 பயணிகளை காப்பாற்றுவதா அல்லது விளையாட்டு மைதானத்திலுள்ள 40,000பேரைக் காப்பாற்றுவதா என யோசித்த புடின், பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார், அதாவது விமானத்தை சுட்டு வீழ்த்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் புடின் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கும் விளையாட்டு மைதானத்திற்கு வந்து விட்ட நிலையில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில், மிரட்டல் விடுத்த விமானப் பயணி மது அருந்தியிருந்ததாகவும், குடி போதையில் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

"Putin" என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் பேட்டி ஒன்றில் புடின் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

Kremlin செய்தித் தொடர்பாளரான Dmitry Peskov இந்த நிகழ்வை உறுதி செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்