ராணுவ தளங்களாக மாறும் ரோஹிங்கியாக்களின் வசிப்பிடங்கள்: செயற்கைகோள் படங்கள்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
95Shares
95Shares
lankasrimarket.com

மியான்மரில் ரோஹிங்கியா மக்களின் வசிப்பிடங்கள் ராணுவ தளங்களாக மாற்றப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் மீது ராணுவத்தினர் கொடூர தாக்குதல் நடத்தினர், இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

சுமார் 8 லட்சம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்க முடியாமல் வங்கதேசம் தவிக்கிறது, எனவே சமீபத்திய ஒப்பந்தத்தின்படி சுமார் 2 ஆண்டுகளுக்குள் மக்களை ஏற்றுக்கொள்ள மியான்மர் சம்மதித்துள்ளது.

இந்நிலையில் ரோஹிங்கியா மக்களின் வசிப்பிடங்கள் ராணுவ தளங்களாகவும், வழிபாட்டு தலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பான செயற்கைகோள் படங்களும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்