உலகை உலுக்கிய மிக மோசமான விமான விபத்துகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1699Shares
1699Shares
lankasrimarket.com

ஈரான் மற்றும் காட்மண்டுவில் அடுத்தடுத்து இருவேறு விமான விபத்து நடந்துள்ள நிலையில், உலகின் மிக மோசமான விமான விபத்துக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஈரானில் துருக்கி நாட்டு தனியார் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த புதுமணப் பெண் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று நேபாள தலைநகர் காட்மண்டுவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீ பிடித்ததால் அதில் பயணம் செய்தவர்களில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கிரீஸ் நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி போயிங் 737-300 ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 121 பேர் பலியாகினர்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி வெஸ்ட் கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மேற்கு வெனிசுவேலாவில் விபத்தில் சிக்கியது. இதில் 160 பேர் பலியாயினர்.

அதே ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி நைஜீரியாவில் விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலியாகினர்.

டிசம்பர் 10 ஆம் திகதி நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் உயிரிழந்தனர்.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.

யூலை 9 ஆம் திகதி ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி துபோலெவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் விபத்துக்குள்ளானதில் 170 பேர் பலியாயினர்.

2007 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் உயிரிழந்தனர்.

யூலை 17 ஆம் திகதி பிரேசில் நாட்டில், டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் உயிரிழந்தனர்.

2009 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு யூலை மாதம் ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் உயிரிழந்தனர்.

2010 ஆம் ஆண்டு மே மாதம் லிபியா நாட்டு, தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் உயிரிழந்தனர்.

மே 22 ஆம் திகதி ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூர் விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2014 ஆம் ஆண்டு ஹாலந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம், ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி ரஷ்ய விமானம், எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் உலக அளவில் 20க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்