49 பேரை காவு வாங்கிய விபத்து! பற்றி எரிந்த விமானம்? காரணம் இதுதான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
421Shares
421Shares
lankasrimarket.com

நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதிகாரிகளின் கட்டளையை விமானி மீறியதே காரணம் என தெரியவந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையே BS 211 எனும் விமானம், விமானப் பணியாளர்கள் உட்பட 71 பேருடன் பயணித்தது.

அவர்களில் 33 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள், 32 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், சீனாவைச் சேர்ந்த ஒருவரும், மாலத்தீவைச் சேர்ந்த ஒருவரும் அதில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்தில், ‘BS 211' விமானம் தரையிறங்கும் முன் தன் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால், ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அந்த விமானம், விபத்துக்குள்ளாகி பற்றி எரியத் தொடங்கியது.

இதைக்கண்ட விமான நிலைய மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

விமானம் விழுந்த உடன் தீ பற்றியதே அதிமானவர்களின் உயிரிழப்புக்குக் காரணம். விமானத்தை தென் பகுதியில் தரையிறக்க விமான ஓட்டிக்குக் கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர் விமானத்தை வடக்குப் பகுதியில் தரையிறக்கியுள்ளார். எதற்காக அவர் இவ்வாறு செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானத்தை வெட்டித் திறந்தே பயணிகளை வெளியே கொண்டு வர முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SUNIL PRADHAN - Anadolu Agency

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்