நேபாள விமான விபத்து: உயிர் பிழைத்தவர்களின் பகீர் அனுபவங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
728Shares
728Shares
lankasrimarket.com

நேபாளின் காத்மண்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 49 பேர்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் கடந்து வந்த திகிலூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Basanta Bohora என்பவர் திடீரென்று விமானம் பலமாகக் குலுங்கியதாகவும் விமானம் தரையில் மோதும் சத்தம் பயங்கரமாகக் கேட்டதாகவும் கூறுகிறார். ஜன்னல் பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.

பங்களாதேஷைச் சேர்ந்த 29 வயது ஆசிரியரான Sharin Ahmed, “விமானத்துக்கு வெளியே பயங்கரமாகத் தீப்பிடித்ததால் நாங்கள் இருந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்தது, ஒரு வெடிச் சத்தமும் கேட்டது. தீ அணைக்கப்பட்டதும் நாங்கள் மீட்கப்பட்டோம்” என்று கூறியுள்ளார்.

விமானம் தீப்பிடித்ததை நினைவு கூறும் பயணி ஒருவர் தான் எவ்வாறு வெளியே வந்தேன் என்பது நினைவில்லை என்று தெரிவித்தார்.

“விமானம் தரையில் மோதியதும் தீப்பிடித்து எரிந்ததால் நான் வெளியேற முயற்சித்தேன், ஆனால் என் கைகளும் கால்களும் சிக்கிக் கொண்டதால் என்னால் அசைய முடியவில்லை. நான் எமர்ஜென்ஸி கதவுக்கு அருகில் இருந்ததால் பாதுகாப்புப்படையினர் வந்து கதவைத் திறந்ததும் வெளியே விழுந்து விட்டேன். நான் சுய நினைவு இழந்து விட்டதால் அதற்குப் பின் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில்லை” என்று கூறினார்.

உயிர் பிழைத்த இன்னொரு பயணியான Sanam Shakya கூறும்போது “விமானம் மேலும் கீழும் அங்கும் இங்குமாக பலமாக அசைந்தது, நான் ஏதோ air trafficதான் என்று எண்ணினேன்” என்றார்.

விமான விபத்து நிகழும்போது அருகிலிருந்த இன்னொரு விமானத்திலிருந்து தன் குழந்தையுடன் நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த Shradha Giri என்னும் பெண் பயணி ”வெளியே ஒரே குழப்பமாகக் காணப்பட்டது, ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.

என் குழந்தையுடன் திகிலுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண் முன்னே நிகழ்ந்த விபத்தால் நாங்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தோம்” என்கிறார்.

ஓய்வு பெற்ற விமானப்படை கமாண்டரான Iqbal Hossain, காத்மண்டு விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவதற்கு விமானிகள் படும்பாட்டை விவரித்தார்.

“விமானத்தின் ஓடு பாதையின் முடிவில் ஒரு மலை உள்ளது. மலையை தாண்டி வந்ததும் விமானத்தை திடீரென்று கீழே இறக்க வேண்டும்.

ஓடு பாதையின் வலது பக்கம் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. தவறுதலாக வலது பக்கம் திருப்பி விட்டால் அவ்வளவுதான். அகால பாதாளத்தில் விழ வேண்டியதுதான்.

உலகின் பத்து மோசமான விமான நிலையங்களில் காத்மண்டுவும் ஒன்று என்றார்.

இதற்குமுன் Pakistan International Airlines விமானம் ஒன்று 1992 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானதில் 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்