உலகில் அதிகளவு ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடு: வெளியான ஆய்வின் முடிவு

Report Print Athavan in ஏனைய நாடுகள்
208Shares
208Shares
ibctamil.com

உலகின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

ஸ்டாக்கோம் எனும் சுவீடனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று உலகின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியளில் 12 சதவீத ஆயுதங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2008 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 24 சதவீதம் கூடுதலாக இந்தியா ஆயுத இறக்குமதி செய்துள்ளது.

ராணுவப் பயன்பாட்டுக்காக இந்தியா இறக்குமதி செய்துள்ள மொத்த ஆயுதங்களில் ரஷ்யாவிடம் இருந்து 62 சதவீத ஆயுதங்களும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடம் இருந்து முறையே 15 மற்றும் 11 சதவிகித ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலாக அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா விளாங்குவதால் இந்தியா தனது ஆயுத இறக்குமதி அளவை அதிகரித்துளது.

மேலும் உலகளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா தொடர்ந்து முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

சீனாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்வதால் இந்தியாவிற்கு ஆயுத விற்பனையின் அளவை அமெரிக்கா அதிகரித்துள்ளது.

இந்தியா தனது ராணுவ பட்ஜெட்டாக 2018-19ம் ஆண்டுக்கு 2.95 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு அடுத்ததாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளாக சவுதி அரேபியா மற்றும் துருக்கி முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்