ஆச்சரியமடைந்த காதல் தம்பதி! 18 ஆண்டுகளுக்கு முன்பே மனைவியின் புகைப்படத்தில் இடம்பிடித்த கணவர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் காதல் தம்பதியினரை 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புகைப்படம் ஆச்சரியப்படுத்தியுள்ளது வைரலாக பரவி வருகிறது.

சீனாவைச் சேர்ந்த தம்பதி யீ-சூய், கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4-ஆம் திகதி யீ தன் மனைவியின் பழைய புகைப்படங்களை பார்த்துள்ளார், அப்போது திடீரென்று ஒரு புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

ஏனெனில் அவரது மனைவி கிங்டாவோவில் இருக்கும் May Fourth Square என்னுமிடத்தில் புகைப்படம் எடுத்துள்ளார், அந்த புகைப்படத்திற்கு பின்னால் இவரும் இருந்துள்ளார்.

அதன் பின் அந்த புகைப்படத்தை அவர் மனைவியிடம் காண்பித்துள்ளார், அந்த புகைப்படம் கடந்த 2000-ஆம் ஆண்டு May Fourth Square பகுதிக்கு சுற்றுலா சென்ற போது எடுத்தது என்று தெரிவித்துள்ளார்.

அதே நாள் தான் நானும் அந்த இடத்திற்கு சுற்றுலா வந்ததாக சூய் கூறியுள்ளார். சுற்றுலா சென்ற இருவரும் தற்செயலாக ஒரே இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

சூய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தொலைவில் யீயின் உருவமும், சூய் இங்கு போஸ் கொடுக்கும் அதே சமயம், பின்னால் நின்றுகொண்டிருக்கும் யீ யும் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்துள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கு முன்னரே ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து யீ கூறுகையில், காதலில் விழுவதற்கு முன்னரே ஏதோ ஒரு தருணத்தில் என் மனைவியை நான் கடந்து சென்றிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் உடல் புல்லரிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்