உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: எந்த நாடு முதலிடம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐநா அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு என்ற சர்வே நடத்தியதில் பின்லாந்து நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற சர்வேயை நடத்தியது.

ஆன்லைன் மூலம் நடந்த இந்த சர்வேயின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த சர்வேயின் முடிவுப்படி பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக சந்தோஷமாக வாழும் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. பின்லாந்தை அடுத்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

மொத்தம் 156 நாடுகள் இந்த சர்வேயில் பங்கேற்றிருந்தன. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை கொண்டே இந்த சர்வே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:

1. Finland

2. Norway

3. Denmark

4. Iceland

5. Switzerland

6. Netherlands

7. Canada

8. New Zealand

9. Sweden

10. Australia

மகிழ்ச்சி குறைவான நாடுகளின் பட்டியல்:

1. Burundi

2. Central African Republic

3. South Sudan

4. Tanzania

5. Yemen

6. Rwanda

7. Syria

8. Liberia

9. Haiti

10. Malawi

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்