உலகிலேயே மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில் நடைபெறும் பகுதி எது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே இஸ்லாமிய நாடு பங்கலாதேஷ் தான். இங்குள்ள ராஜ்பாரி பகுதியில் செயல்படும் டால்ட்டியா ப்ராத்தல் தான் உலகிலேயே பாலியல் தொழில் நடக்கூடிய மிகப்பெரிய இடமாக இருக்கிறது.

இங்கே சுமார் 1500க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 ஆண்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த ராஜ்பாரி பகுதியில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நடந்திருக்கிறது, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தப் பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இங்கே பாலியல் தொழிலாளியாக பணியாற்ற வேண்டுமெனில் 18 வயது பூர்த்தியாக வேண்டும். ஆனால் பதினெட்டு வயதுக்கும் குறைவான பெண்களும் இங்கே உள்ளனர்.

பாலியல் தொழில் மட்டுமின்றி இங்குள்ள பெண்கள் போதை மருந்து கடத்தல் உட்பட பல சட்டத்திற்கு புறம்பான விடயங்களை செய்கின்றனர்.

ராஜ்பாரி பகுதியானது ரயில்வே பாலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. அதனால் ரயில் பயணிகள், மற்றும் நீண்ட பயணம் மேற்கொள்கிறவர்கள் அடிக்கடி இந்த இடத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இங்குள்ள பெண்கள் ஸ்டிராய்டு பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வதாக கூறப்படுகிறது.

மருந்தகங்களில் சர்வசாதாரணமாக கிடைக்கும் இதனை உட்கொண்டவுடன் பெண்களின் முகம் சற்று வீங்குகிறது, இதனால் தாங்கள் நிறமாகவும் அழகாகவும் தெரிவதாக இங்குள்ள பெண்கள் நம்புகின்றனர்.

ராஜ்பாரி பகுதியிலேயே பாலியல் தொழிலாளர்களுக்கு என்றே மயானம் இருக்கிறது, இங்கே இறக்கும் பாலியல் தொழிலாளர்களை அங்கேயே புதைக்கிறார்கள். பெரும்பாலும் எந்த நினைவுக்கல்லும் வைப்பதில்லை.

ராஜ்பாரி பகுதியில் சர்வசாதாரணமாக வயாகரா மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாக கூறுகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு என்று தனித்தனியாக வீடு ஒதுக்கப்படுகிறது, அங்கே கூட்டமாக இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்.

இங்குள்ள பலரும் யாபா என்ற ஒரு வகை போதை மருந்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள். இது மியான்மரிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வருகிறார்கள். அங்கே தான் இந்த யாபா உற்பத்தி செய்யப்படுகிறது.

பெரிய சந்தையை போல இருக்கும் கேம்ப்லிங் ஹால் என்ற பகுதியில் வைத்து தான் விலை பேசி நிர்ணயிக்கப்படுகிறது.

அங்கே தான் வருகின்ற வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள். அங்கே விலை பேசி முடிவு செய்யப்பட்ட பிறகே அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்