ஆசிரியரின் செயலால் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கிடைத்த கணினி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
30Shares
30Shares
ibctamil.com

ஆப்பிரிக்க நாடான கானாவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் கணினி வசதி இல்லாத காரணத்தால் கரும்பலகையில் பாடம் நடத்திய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய கணினி நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு இலவச கணினியை அளித்துள்ளது.

கானா நாட்டில் உள்ள செக்யிடோமேஸ் கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆசிரியர் ரிச்சர்ட் அப்பையா அகோடோ. இவர் அங்குள்ள பெட்டாநேஸ் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

அப்பள்ளியில் கணினி வசதி இல்லாத காரணத்தால், ரிச்சர்ட் ‘Windows Word' குறித்த படத்தை கரும்பலகையிலேயே வரைந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.

மேலும், இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த காட்சி வைரலாக பரவியதைத் தொடர்ந்து, இந்தியாவின் 'NIIT' எனும் கணினி நிறுவனம் இந்த வீடியோவை பார்த்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கானாவில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் கிளை சார்பில், மாணவர்களுக்கு 5 கணினிகள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றுடன் கணினி பாடப்புத்தகங்களும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து NIIT மையத்தின் மேலாளர் ஆஷிஸ் குமார் கூறுகையில், ‘பேஸ்புக் மூலம் அப்பையா பதிவிட்டிருந்த வீடியோவைப் பார்த்தோம். மாணவர்களுக்கு அவர் ஈடுபாட்டுடன் கல்வி கற்பித்து கொடுக்கும் முறையை பார்த்து வியப்படைந்தோம்.

இதனைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கு உதவும் வகையில், கணினிகளை இலவசமாக அளித்திருக்கிறோம். பள்ளிக்கூடத்துக்கு புதிதாக கணினி அளிக்கப்பட்ட செய்தியை மாணவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்