47 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகில் நடைபெறும் சில சம்பவங்களுக்கு விடை தெரியாவிட்டடால் அதனை உலக மர்மங்களின் வரிசையில் இணைத்து அதற்கு விடையை தேடி அலைவது வழக்கமான ஒன்றாகிவிட்டது,

பல்வேறு தரப்பட்ட மக்களை உள்ளடக்கிய இந்த உலகில் மர்மத்திற்கா பஞ்சம் இருக்கப்போகிறது.

பறக்கும் தட்டு தொடங்கி எகிப்து பிரமிடு வரை மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அதிலும், குறிப்பாக மனிதர்கள் கூறும் சில விடயங்கள் சக மனிதர்களிடையே நம்பமுடியாத அதே சமயத்தில் இப்படி ஒன்று இருக்கிறதா என்ற சந்தேக கேள்வியையும் எழுப்புகிறது.

1971 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பெல்மஸ் கிராமத்தை சேர்ந்த மரியா பெரேரா என்ற பெண்மணி தனது வீட்டின் சமையலைறையின் அறையில் அவ்வப்போது மனித முகம் ஒன்று பல்வேறு கோணங்களில் தோன்றுகிறது என்று கூறி அனைத்து மக்களையும் தனது வீட்டிற்கு வரவழைத்தது இன்று வரை மர்மர்களின் வரிசையில் உள்ளது.

என்ன நடந்தது?

இப்பெண்மணியில் சமையலறையின் அறையில் அதிகமான முகங்கள் தோன்றியுள்ளன, ஆண் முகம், பெண் முகம் என்று மாறி மாறி தோன்றியதையடுத்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புதிரை காண்பதற்கு சென்றனர்.

சுவற்றில் தெரிந்த அந்த முகம் பல்வேறு முக பாவனைகளையும் காட்டியுள்ளது, இது மர்மமாக இருந்ததால் மக்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்தனர், இருப்பினும் இப்பெண்மணியே சுவற்றில் முகங்களை மறைத்து வைத்து பணத்திற்காக இவ்வாறு நாடகமாடுகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால், அப்பெண்மணி 2004 ஆம் ஆண்டு இறந்தும், 47 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த மர்மம் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்