ரசாயன ஆயுதங்கள் சோதனை செய்யும் ரஷ்யா: வெளியான பகீர் புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் நாய்களை வைத்து ரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபல் மற்றும் அவரது மகளும் கடந்த வாரம் Novichok எனப்படும் ரசாயன ஆயுதம் மூலம் கொல்லப்பட்டனர்.

இதற்கு ரஷ்யா மறுப்புத் தெரிவித்து வந்தது. இந்நிலையில் உஸ்பெக்கிஸ்தான் அருகே ரசாயன ஆயுத கிடங்கு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ரகசிய ரசாயன ஆயுதக் கிடங்கில் ஆயிரத்திற்கும் அதிகமான நாய்களை வைத்து ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.

இந்த சோதனையில் ஆயிரக்கணக்கான நாய்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தாகக் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்