இந்த 10 நாடுகளில் தான் பெட்ரோல் விலை மிகவும் குறைவு!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகில் உள்ள இந்த 10 நாடுகளில் பெட்ரோலின் விலை மிகவும் குறைவு ஆகும்.

எந்தெந்த நாடுகளில் பெட்ரோல் விலை எவ்வளவு என்பதை இங்கு காண்போம்.

உலகளவில் பெட்ரோலை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் நாடு வெனிசுலா ஆகும். இங்கு பெட்ரோலின் விலை 0.1 டொலர் (இந்திய மதிப்பில் 1.74 ரூபாய்) ஆகும்.

கச்சா எண்ணெய்யை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவில், ஒரு லிட்டர் பெட்ரோல் 0.47 சவுதி ரியாலுக்கு (இந்திய மதிப்பில் 8.16 ரூபாய்) விற்கப்படுகின்றது.

பெட்ரோலை குறைந்த விலைக்கு விற்பதில் மூன்றாவது இடத்தில் உள்ள நாடு லிபியா ஆகும். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 0.14 டொலருக்கு விற்கப்படுகிறது.

நான்காவது இடத்தில் உள்ள எகிப்தில், பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.6 பவுண்டுகள் ஆகும். 5வது இடத்தை பிடித்துள்ள அல்ஜீரியாவில் பெட்ரோலின் விலை 40.30 தினார் (இந்திய மதிப்பில் 23 ரூபாய்) ஆகும்.

பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடான குவைத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல் 0.11 தினார் என்ற அளவில் விற்கப்படுகிறது.

பஹ்ரைன் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 0.14 பஹ்ரைன் தினார் ஆகவும், துர்க்மெனிஸ்தானில் பெட்ரோல் விலை 0.43 டொலர் ஆகவும் உள்ளது.

கத்தார் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.80 ரியால் (இந்திய மதிப்பில் 32 ரூபாய்) ஆகும். ஓமன் நாட்டில் 0.30 ஓமன் ரியாலுக்கு (இந்திய மதிப்பில் 33 ரூபாய்) ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்