சவுதி அரேபியாவில் இறந்த மகன்: தமிழகத்திற்கு கொண்டு வர கண்ணீருடன் போராடும் தாய்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் இறந்த மகனின் உடலை மீட்பதற்கு தாயார் போராடி வருகிறார்.

திருவாரூர் மாவட்டம், கண்டிரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வன். கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் திகதி மராடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இது குறித்த தகவல் அவரது தாயார் சாந்தாகவுக்கு தெரியவந்ததால், உடலை தமிழகத்திற்கு கொண்டு வர முடியாமல் சாந்தா தவித்துள்ளார்.

இதனால் தனது மகனின் உடலை கொண்டு வருவதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் சாந்தா மனு கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்காததால் சாந்த மிகுந்த துயரத்தில் உள்ளார். ஒன்றரை மாதங்கள் போராடி எந்த பலனும் கிடைக்காத காரணத்தினால், அவரது உறவினர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அவருடைய உடலுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்