இவ்வளவு அழகாக இருக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? மனதை உருக்கும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

மலேசியாவைச் சேர்ந்த இளம் தாய் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் கலவையான விமர்ச்சனங்களை பெற்று வருகிறது..

மலேசியாவின் Johor மாகாணத்தைச் சேர்ந்தவர் Doreen Ching(23). இவருக்கு Toh Yang Ming என்ற கணவரும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் Doreen Ching சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய வயிற்றை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இவருக்கு வயிறு பகுதிகளில் வரித் தழும்புகள் இருந்துள்ளது. இப்படி அழகா இருக்கும் பெண்ணுக்கு ஏன் இந்த நிலைமை என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அதற்கும் அவரே பதிலளித்திருந்தார்.

அதாவது நான்கு குழந்தைகளுக்கு தாய் ஆனதன் காரணமாகவே என் வயிறு இப்படி ஆகிவிட்டது எனவும் தன்னுடைய நான்காவது பிரசவத்தின் போது அறையிலிருந்து வெளியில் வந்த போதே வயிற்றைப் பார்த்து அழுததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி என்னுடைய வயிறு இப்படி ஆனதற்கு என் கணவரும் ஒரு காரணம் என்பதால், என் வயிற்றை திருப்பிக் கொடு எனவும் வயிற்றை சரி செய்ய முடியுமா என்று உருக்கமாக கேட்டுள்ளார்.

அவரது இந்த புகைப்படத்திற்கு சிலர் ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், ஒரு சிலர் பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது, வாந்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வயிற்றை சரி செய்ய முடியுமா என்று கேட்ட போது, Doreen என்ற இணையவாசி எத்தனை அறுவகை சிகிச்சைகள் செய்தாலும், பணத்தினை செலவழித்தாலும் கிடைக்கப்போவதில்லை எனவும், இதற்கு பெண்களே காரணம் எனவும் அவர்களே அதிக குழந்தைகள் வேண்டும் என்று கூறுவதால் இது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Doreen Ching-ன் இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் 2,000 ஷேர்களையும் 23,000 லைக்களையும் பெற்றுள்ளதுடன், சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவானைச் சேர்ந்த மக்கள் ஆதரவான கருத்துக்களை கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்