நகரும் படிக்கட்டில் தலைகுப்புற கீழே விழுந்த பாட்டி: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் உள்ள நகரும் படிக்கட்டில் வயதான மூதாட்டி ஏற தெரியாமல் ஏறி நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sterlitamak நகரில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மூதாட்டி ஒருவர் தனது பேத்தியை அழைத்து கொண்டு வந்துள்ளார்.

அங்கே மேலே ஏறுவதற்கும், கீழே இறங்குவதற்கும் இரண்டு நகரும் படிக்கட்டுகள் அருகருகில் இருந்த நிலையில், மூதாட்டி ஏறும் படிக்கட்டுக்கு பதிலாக முதலில் கீழே இறங்கும் படிக்கட்டின் மீது ஏற முயற்சித்துள்ளார்.

பின்னர் சுதாரித்து கொண்டு தனது பேத்தியின் கையை பிடித்து அருகில் இருந்த இன்னொரு படிக்கட்டில் தட்டுதடுமாறி ஏறியுள்ளார்.

வீடியோவை காண

பின்னர் அப்படியே நிலைதடுமாறி நகரும் படிக்கட்டில் குப்புற விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் அவரச உதவி பட்டனை அழுத்தியுள்ளனர்.

பின்னர் மூதாட்டிக்கு தலை மற்றும் கை பகுதியில் அடிப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்