இலங்கைக்கு சென்ற அப்பாவை 27 வருடமாக தேடிய சிங்கப்பூர் மகள்: மனம் உருக வைத்த பேஸ்புக் பதிவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிங்கப்பூரில் தந்தையை பற்றிய தகவல் கிடைத்த போதும் அவரை பார்க்க முடியாமல் அவரது மகள் தவித்து வரும் சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் Kanagasundaram Somasundaram(60). இவருக்கு விமலா என்ற மனைவியும் Durga Keshav என்ற மகளும் உள்ளனர்.

சிங்கப்பூரில் குடும்பத்தினருடன் Kanagasundaram Somasundaram வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 1991-ஆம் ஆண்டு வேலை பார்த்த இடத்தில் அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைச் சென்ற அவர், அதன் பின் சிங்கப்பூர் திரும்பவே இல்லை. Durga Keshav-வுக்கு ஒன்றரை வயதில் இருக்கும் போது சென்றவர் கடந்த 27-ஆண்டுகளாக வரவேயில்லை.

இதனால் Durga Keshav இது குறித்து சமூகவலைத்தளம் மற்றும் விளம்பரங்களில் கொடுத்துள்ளார். அதன் பின் ஒரு வழியாக அவரது தந்தையின் உறவினர்கள் மூலம் அவர் இருப்பதை Durga Keshav அறிந்துள்ளார்.

தந்தையிடம் பேசியும் உள்ளார். ஆனால் தான் எங்கு இருக்கிறேன் என்பதை அவர் கூற மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய அப்பா எங்கு இருக்கிறார் என்பதை தெரியாமல் அவர் தவித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அவருடைய தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டு அந்த குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவதாகவும் Durga Keshav-க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் Durga Keshav நான் அவரை பார்க்க மட்டுமே விரும்புகிறேன்.

எனக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும், அதுமட்டுமின்றி இலங்கையில் உள்ள என்னுடைய தந்தையின் உறவினர்கள் அனைவரையும் அறிய வேண்டும் என்னுடைய எதிர்காலம் மற்றும் பரம்பரையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் காரணமாகவே அவருடன் பேச விரும்பதாக கூறியுள்ளார்.

மேலும் Kanagasundaram Somasundaram முதலில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக இவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது அவர் கனடா அல்லது அவுஸ்திரேலியாவில் தன்னுடைய புதிய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அதையும் உறுதிபடுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Kanagasundaram Somasundaram இலங்கையின் Jaffna பகுதியில் உள்ள Point Pedro என்ற இடத்தில் பிறந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு தம்பி மற்றும் தங்கை என்ற உடன் பிறந்தவர்கள் உள்ளனர். இவர்கள் Madhu Church-க்கு அருகில் உள்ள Pandivirichchan பகுதியில் வசித்து வருகின்றனர்.

கடந்த 1991-ஆம் ஆண்டு இலங்கை சென்ற அவர் அதன் பின் திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி விமலா சிங்கப்பூர் வழக்கறிஞரை வைத்து இலங்கையில் இவரைப் பற்றி விளம்பரம் கொடுத்துள்ளார். ஆனால் எந்த வித பலனும் கிடைக்கவில்லை.

அதன் பின் அவரது மகள் Durga Keshav சமீபத்தில் இதைப் பற்றி தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அது படிப் படியாக வைரலாக பரவி ஊடகங்கள் உட்பட அனைத்திலும் செய்தியாக வந்துள்ளது. தந்தையைப் பற்றிய தகவல் கிடைத்து பேசிய போது, அவர் இருக்கும் இடம் தெரியாமல் அவர் தவித்து வருகிறார்.

மேலும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் Kanagasundaram Somasundaram இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்துள்ளார். சிங்கப்பூர் வந்த பின்பு கார்பெண்டராக வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...