உலகில் அதிகளவில் பாலியல் பலாத்காரங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன.

இன்றைய நாகரீக உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் முன்னேறியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னமும் தீரவில்லை.

பெண்கள் மீதான சமூகத் தாக்குதல் முடிந்து போய் பெண்கள் இன்று பாதுகாப்பான சூழலில் தான் இருக்கிறார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது சந்தேகமாக உள்ளது.

பாலியல் தொல்லை என்பது ஒவ்வொரு நாட்டிலும் பெண்களை துன்புறுத்தும் பிரச்சனை என்றாலும், சில நாடுகளில் அவை அத்து மீறுகின்றன. தென் ஆப்பிரிக்கா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் பாலியல் தொல்லைகள் அதிகம்.

உலகளவில் பாலியல் தொல்லைகள் நடக்கும் முதல் 5 நாடுகள் இதோ,

தென் ஆப்பிரிக்கா (South Africa)

தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாளைக்கு 100,00 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள். அந்நாட்டில், 90 சதவீத மக்களுக்கு போதிய சம உரிமைகள் வழங்கப்படவில்லை. மோசமான கல்வி மற்றும் இரண்டாம் குடிமகனாகவே கருதப்படுகிறார்கள்.

70,000 குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது, இதில் பெரும்பாலானோர் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிப்பதில்லை. ஒரு ஆண்டுக்கு, 500,000 பாலியல் தொல்லைகள் நடக்கிறது என பதிவாகியுள்ளது,

அந்நாட்டில் எய்ட்ஸ் நோயால் 11 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போட்ஸ்வானா (Botswana)

92.9 சதவீதம் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன, இந்நாட்டு மக்கள் பொருட்களை பிறரிடம் இருந்து கொள்ளையடிக்க செல்கையில், அங்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், இந்நாட்டு மக்களிடம் இருக்கும் மோசமான நம்பிக்கை, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணம் ஆகாத பெண்ணுடன் உறவு கொண்டால், எய்ட்ஸ் நோய் குணமாகிவிடும் என்பதே.

இந்நாட்டில், அதிகமான மக்கள் படிப்பறிவில்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஸ்வீடன் (Sweden)

பாலியல் பலாத்கார நாடுகளில் ஸ்வீடன் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்று. வளர்ச்சிபாதையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் ஸ்வீடனில் 3 இல் 1 பெண்கள், வெளியில் செல்கையில் பலாத்கார தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

2013 ஆம் ஆண்டில் 1,000 பெண்கள் அந்நாட்டில் குடியேறியுள்ள முஸ்லீம் குடியேறிகளால் பலாத்காரத்திற்கு ஆளானதாக புகார்கள் எழுந்தது. மேலும் 15 வயதுக்குட்பட்ட பெண்களும் அதிகமாக பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். ஒரு நாளைக்கு 64 பாலியல் புகார்கள் பதிவாகியுள்ளது என ஸ்வீடன் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிகரகுவா (Nicaragua)

இந்நாட்டில், மோசமான கல்வி முறைகள் உள்ளது. அதுமட்டுமின்றி இன்றுவரை, இந்நாட்டில் கணவர் தான் குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும், அனைத்து பொறுப்புகளும் அவருடையது ஆகும். மனைவியர் இரண்டாம் குடிமக்கள் ஆவார்.

மேலும், கால்நடைகளை போன்று தான் பெண்களை இந்நாட்டில் நடத்துவார்கள். ஒரு நாளைக்கு 31.6 சதவீத பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன.

கிரெனடா (Grenada)

இந்நாட்டில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு 15 ஆண்டுகள் சிறை என்ற சட்டம் இருந்தாலும், அதனையும் மீறி குற்றங்கள் நடக்கின்றன.

ஒரு ஆண்டுக்கு 54.8 சதவீதம் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என பதிவாகியிருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்த வீதம் 30.6 -க்கு குறைந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers