பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பப்புவா நியூ கினியா தீவில் இன்று ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அவுஸ்திரேலியாவை ஒட்டி அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்றும் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 47 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.3 அலகுகளாக பதிவானது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers