வேலை தருவதாக ஏமாற்றி அரேபியருக்கு விற்கப்பட்ட இளம்பெண்: வெளியான அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியாவின் ஐதராபாத் நகரில் பெண் ஒருவரை துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அரேபியருக்கு விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐக்கிய அமீரகமான துபாயில் உள்ள அரேபியர் ஒருவருக்கு பணிப்பெண்ணாக விற்கப்பட்டுள்ளார் அவர்.

ஏழ்மை நிலையில் உழன்று வந்த அந்த பெண்ணின் குடும்பம், துபாயில் வேலை என வாக்குறிதி அளிக்கப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதுநாள் வரை தாங்கள் பட்ட துயரங்களுக்கு விடிவு கிட்டியதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் துபாய் சென்ற அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை என கூறப்பட்ட நிலையில், அங்குள்ள அரேபியர் ஒருவரது குடியிருப்பில் பணிப்பெண்ணாக பணிக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

அங்கே, சித்திரவதை, அதிக வேலைப்பழு, போதிய உணவு இல்லை, தூக்கம் இல்லை, சின்ன தவறுக்கும் கொடூர தண்டனை, சிறை வாசம் என பரிதவித்துள்ளார்.

துபாயில் வேலை என கூறப்பட்ட நிலையில், அவரை அழைத்துச் சென்ற முகவர் ஷார்ஜாவுக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கே அரேபியர் ஒருவர் குறித்த இளம்பெண்ணை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி பஹ்ரைன் கொண்டு சென்று அங்கிருந்து ஓமான் நாட்டுக்கு அழைத்து சென்று பணிப்பெண்ணாக அமர்த்தியுள்ளார்.

இந்த நிலையில் சந்தர்ப்பம் வாய்த்தபோது தனது நிலையை வீட்டாருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் முடிவில், குறித்த அரேபியரிடம் இருந்து மீட்டுள்ளனர்.

தற்போது அவர் நாடு திரும்பும் நிலையில் உள்ளதாக அங்குள்ள தூதரக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers