மனிதர்களுடன் வாழும் வாழ்வு ஏமாற்றமளிக்கிறது: நிஜ டார்சன் கூறுகிறார்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜங்கிள் புக், டார்சன் உள்ளிட்ட திரைப்படத்தில் வருவதுபோலவே ஓநாய்களால் வளர்க்கப்பட்ட ஒரு மனிதர், தனக்கு மனிதர்களுடன் வாழும் வாழ்வு ஏமாற்றமளிப்பதாகக் கூறுகிறார்.

1946 ஆம் ஆண்டு ஸ்பெயினிலுள்ள Cordoba பகுதியில் பிறந்தவர் Marcos Rodriquez. அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தாய் இறந்துபோக அவரது தந்தை அவரை ஒரு விவசாயிக்கு விற்று விட்டு இன்னொரு குடும்பத்தை உருவாக்க சென்றுவிட்டார்.

வாழ்வதற்கு அடிப்படையான சில விடயங்களைக் கற்றுக்கொடுத்த அந்த விவசாயியும் சில வருடங்களில் இறந்துபோக தனிமையானார் Marcos.

Metro Grab

காட்டு விலங்குகளுடன் வாழப் பழகிக் கொண்டார் Marcos. அவை அவருக்கு எதை சாப்பிடுவது என்று கற்றுக் கொடுத்தன. அவை எதையெல்லாம் சாப்பிட்டனவோ அதையெல்லாம் அவரும் சாப்பிடப் பழகிக் கொண்டார்.

மிருகங்களுடன் அவருக்கு ஒரு இனம்புரியாத பிணைப்பு ஏற்பட்டது. ஓநாய்க்குட்டிகள் அவரை சகோதரனாக ஏற்றுக்கொண்டன.

ஒரு பெண் ஓநாய் அவருக்கு பாலூட்டி தாய்மை என்றால் என்னவென்று அவருக்குக் கற்றுக்கொடுத்தது. ஒரு பாம்பும் அவருக்கு நல்ல தோழியாக இருந்தது. அவர் அதற்கொரு கூட்டை அமைத்து ஆடுகளின் பாலை அதற்கு தருவதுண்டு.

Metro Grab

அவர் எங்கு சென்றாலும் அந்தப் பாம்பும் அவருக்கு பாதுகாப்பாக அவருடன் செல்லும். Marcosக்கு 19 வயதாகும்போது அதிகாரிகளால் அவர் கண்டுபிடிக்கப்பட்டபோது ஒரு மிருகம் போலவே இருந்தார்.

தற்போது Rante என்னும் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார் அவர். இப்போது உங்களால் விலங்குகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டதற்கு, முடியும் என்று கூறும் அவர், ஆனால் அவை இனி ஒரு சகோதரனாக என்னை அணுகாது, ஏனென்றால் என்னிடம் இப்போது மனித வாசனை வீசுகிறது. நான் கொலோன் வேறு உபயோகிக்கிறேன் என்கிறார்.

காடு தான் தனக்கு பிடித்துள்ளதாகக் கூறும் Marcos, தான் நாட்டிலிருப்பதற்கு பெண்களும் இசையும்தான் காரணம் என்று குறும்பாகக் கூறுகிறார்.

Metro Grab

Metro Grab

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...